ரஞ்சி போட்டியில் ஜடேஜா | ஜனவரி 15, 2023
புதுடில்லி: இந்தியாவின் ஜடேஜா, தனது உடற்தகுதியை நிரூபிக்க ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட உள்ளார்.
இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா 34. கடந்த ஆண்டு வலது முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,) காயத்தில் இருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் உள்ள ஜடேஜா, டெஸ்ட் போட்டிக்கான இந்திய ‘லெவன்’ அணியில் இடம் பிடிக்க உடற்தகுதியை நிரூபிக்க வேண்டியது அவசியம். இதனையடுத்து ரஞ்சி கோப்பை விளையாட திட்டமிட்டுள்ளார். வரும் ஜன. 24ல் சென்னையில் துவங்கவுள்ள தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணி சார்பில் களமிறங்குகிறார்.
ஜடேஜா, இதுவரை 60 டெஸ்ட் (2523 ரன், 242 விக்கெட்), 171 ஒருநாள் (2447 ரன், 189 விக்கெட்), 64 சர்வதேச ‘டி–20’ (457 ரன், 51 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
